தற்போது இந்தியா மட்டுமல்லாமல் உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் கொரோனா வைரஸ்.சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் படிப்படியாக பல நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது.விரல்விட்டு எண்ணிவிடும் அளவிற்கே சில நாடுகள் கொரோனா வைரஸ் பரவாமல் உள்ளது.
இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில் 30000க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கையானது அதிகமாகிக்கொண்டேதான் இருக்கிறது.மேலும் இந்தியாவிலும் இந்த எண்ணிக்கையானது அதிகமாகி வருகிறது.இறப்பு விகிதத்தில் இந்தியா குறைவானதாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேதான் இருக்கிறது.
உலக அளவில் உயிரிழந்தவர்களின் பலர் வயது அதிகமானவர்கள்தான் என்பதால் இந்தியாவிலும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கே அதிகமாக இந்த வைரஸ் தாக்கியுள்ளது.பாமர மக்களையே அதிகமாகி தாக்கி வந்த இந்த வைரஸ் பிரிட்டன் நாட்டு இளவரசர் முதல் பலரையும் விடாமல் பிடித்தது.இதில் ஸ்பெயின் நாட்டு இளவரசியான மரியா தெரசாவுக்கு ஒருவர்.
ஸ்பெயின் நாடு இந்த கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.இதுவரை 70000க்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அந்த நாடு இதிலிருந்து தப்பிக்க பல முயற்சிகள் எடுத்தும் இந்த பிரச்சனையை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை.
இந்தநிலையில் உலகையே அதிர்ச்சிப்படுத்தும் விதமாக ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.ஏற்கனவே கொரோனாவால் அதிகமான மக்கள் அங்கு இறந்துவரு நிலையில் தற்போது இளவரசியின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Leave a Reply