பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் !! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர் !!

News

தமிழ் ரசிகர்களால் விக்ரம் நடிப்பில் வெளியான தூள் திரைப்படத்தில் உள்ள சிங்கம் போல நடந்துவரான் செல்லப்பேராண்டி பாடலை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.பாடல் மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.மேலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

அதிகப்படியான நாட்டுப்புற பாடல்கள், சினிமா பாடல்கள் பாடிய முனியம்மா 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரில் பிறந்ததால் ‘பரவை முனியம்மா’ என மக்களால் அழைக்கப்படுகிறார்.

கலைமாமணி விருது பெற்றுள்ள பரவை முனியம்மா சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான்.கடைசியாக இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான்கராத்தே திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

அதற்குப்பிறகு இவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் அதிகமான படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை.பின் சில நாட்களில் படுத்தப்படுக்கையானார் முனியம்மா.இவருக்கு உடலில் நீண்ட நாட்களாகவே சிறுநீரகக்கோளாறு இருந்துவந்தது.மேலும் சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தியுள்ளார்.மருத்துவமனையில் வைத்தே உயிர் பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.மேலும் இவரது இழப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இவரது இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *