மருத்துவரும் சினிமா நடிகருமான மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர் டாக்டர் சேதுராமன்.சினிமாவில் அதிகமான படங்களில் நடிக்காவிட்டாலும் மக்கள் மத்தியில் நல்ல புகழை பெற்றிருந்தார்.இவர் அவ்வப்போது வழங்கும் மருத்துவ உதவிகள் அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.இணையத்தில் இன்றும் இவரது வீடியோக்கள் அதிகமாக வலம்வருவதை பார்க்க முடியும்.
2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் அடுத்ததாக சந்தானம் நடிப்பில் வெளிவந்த வாலிபராஜா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார்.இவரது இழப்பு திரையுலகினர் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
சேதுராமன் மருத்துவ ஆலோசகராக பல குறிப்புகளை மக்களுக்கு பயனுள்ள வகையில் வழங்கியுள்ளார்.தற்போது அதேபோல இன்னொரு மருத்துவராக இருக்கும் அஸ்வின் சேதுராமனின் இறப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் இதுவரை நான் எனது பிறந்தநாளை பொதுவெளியில் அறிவித்ததில்லை.ஆனால் இப்போது கூறுகிறேன்.மார்ச் 26 என் நண்பன் சேதுராமன் உயிரிழந்த தினம்தான் எனது பிறந்த தினம் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் சேது எனக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போது மச்சான் இந்த பிறந்தநாளுக்கு உனக்கு பண் தான் வாங்கித்தர முடியும் என நகைச்சுவையாக கூறினான்.இனி வரப்போகும் பிறந்தநாள் தினங்கள் எப்படி போகப்போகிறது என்பது தெரியவில்லை என கூறியுள்ளார்.